29 ஜன., 2015

திருவள்ளூரில் 41,473 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத 102 மையங்கள் அமைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், வரும் மார்ச் மாதம், 41,473 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, மாவட்டம் முழுவதும், 102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், பொன்னேரி, திருவள்ளூர்

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக் கழகத்தில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு  வருகிற 29.01.2015 முதல், பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் நம்முடைய சிறப்புத் தலைவர் அய்யா ஆறுமுகம், பொருளாளர் கோவிந்தன், தலைமை நிலையச் செயலர் மதியழகன், சென்னை மாவட்டத் தலைவர் தாயுமானவன், திருச்சி மாவட்டச் செயலர் ரபேல், சிவகங்கை  மாவட்ட மதிப்பியல் தலைவர் பேராசிரியர் கருப்பத்தேவன் ஆகியோர் கலந்து கொண்டு  கட்டுரை படிக்க உள்ளனர்.
குறுந்தொகையில் புறச்செய்திகள்” - சிறப்புத் தலைவர் அய்யா ஆறுமுகம்
இளங்கோவடிகளின் காலம்”               - பொருளாளர் கோவிந்தன்
”குறுந்தொகையில் மனிதநேயச் சிந்தனைகள்” - சென்னை மாவட்டத் தலைவர் தாயுமானவர்
”தமிழில் பெயரடைகள்”   - சிவகங்கை  மாவட்ட மதிப்பியல் தலைவர் பேராசிரியர் கருப்பத்தேவன்


26 ஜன., 2015

உத்தராகாண்ட் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் தருண்விஜய்

உத்தராகாண்ட் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் தருண்விஜய்  அவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகில் உள்ள கருதுப்பட்டியில் உள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பர் நினைவிடத்தில் தமிழகத்தமிழாசிரியர் கழகம் வரவேற்பு அளித்தது.

18 ஜன., 2015

ஏழாவது ஊதியக்குழு

7th CPC Estimated Pay Calculator | மத்திய அரசு ஏழாவது ஊதிய குழுவை அமைத்துள்ளது. ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடுhttp://www.gconnect.in/pages/2014/7th-CPC/7cpc.htm

பென்னி குக் - தமிழகமும் தமிழர்களும் நன்றி யுடன் நினைவு கூறும் அயலார் வரிசையில் மணிமகுடம்

ஜனவரி 15: முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பென்னிக் குக் பிறந்த தினம் - சிறப்புப் பகிர்வு

     ஜான் பென்னி குக் என்னும் அற்புத மனிதர் பிறந்த நாள்

எத்தியோப்பியாவில் ஆங்கிலேய அரசுக்குப் பணி செய்துவிட்டு பொதுப்பணித் துறைப் பொறியியல் வல்லுநராக மதுரையில் பணியாற்றினார். பசியும், வறுமையும் தென்பகுதி மக்களை வாட்டுவதைக் கண்டார். பலபேர் கொள்ளையடிப்பில் ஈடுபடுவதையும் கண்டார். வெறுமனே வைகை நதியை மட்டும் நம்பி வானம் பார்த்த பூமியாக இருந்த

8 ஜன., 2015

தினத்தந்தி நாளிதழ் செய்தி


தமிழக அரசியல் இதழ்ச் செய்தி




தமிழ்ப்பாடத்தை இறுதியில் வைத்துள்ள முறைமையை மாற்றி, முதல் பாடமாக முதன்மைப் பாடமாக தமிழை வைக்க அரசாணை எண்: 266 -இல் உரிய திருத்தங்களைச் செய்துதரக் கோரி பள்ளிக்கல்வித் துறைச் செயலர், இயக்குநர் ஆகியோரை மாநிலப் பொறுப்பாளர்கள் வலியுறுத்தி வந்தனர்






காஞ்சிபுரம் செயற்குழுவில் மாநிலப் பொறுப்பாளர்கள்

மாடல்ல மற்றை யவை.. - நுால் அறிமுகம்

மாடல்ல மற்றை யவை..
- நுால் அறிமுகம்
சிவகங்கை மாவட்ட இணைச் செயலர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு நுால் வெளியீட்டு விழா 05.01.2014 அன்று காரைக்குடியில் இனிதே நடைபெற்றது. பேராசிரியர். முனைவர். அய்க்கண் தலைமை தாங்கி விழாப்பேருரை ஆற்றினார். இந்நுாலுக்குத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலச் செயலர் நீ.இளங்கோ அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார். சுழல் என்னும் சிற்றிதழின் ஆசிரியராகவும் உள்ள இந்நுாலின் ஆசிரியர் தேவகோட்டை தே பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நுாலினைச் சேலம், வாசகன் பதிப்பகமும் காரைக்குடி, வள்ளுவர் பேரவையும் இணைந்து வெளியிட்டுள்ளன.
நுாலின் பெயர் -  மாடல்ல மற்றை யவை..
நுால் பிரிவு    –  சிறுகதைத் தொகுப்பு
பதிப்பு         –  முதல் பதிப்பு 2014
விலை        –  ரூ.55
ISBN           -   978-93-83188-20-8
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBScc-oWMHANfvQnM69XmlVlOKZ97inwMJmn3Xz57Ivs9iDt5IECn4LWtwd4YYMjn0O0ZR185TQ9q86Od3zSs-m2dbJmAEDcKhB0phyphenhyphenAwtAhiFT9qLw3B19JG4Ye3TDywf5qgg0RPcRqFH/s1600/stephen+nool+veliyeedu.jpg


6 ஜன., 2015

பள்ளிப் பாடத்திட்டத்திலேயே தமிழ் இசைப் பாடங்களைச் சேர்க்க கோரிக்கை

பள்ளிப் பாடத்திட்டத்திலேயே தமிழ் இசைப் பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும் என, தமிழ் இசைச் சங்கத்தில் நடந்த விழாவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ் இசைச் சங்கத்தின், பண் ஆராய்ச்சியின் 65ஆவது கூட்டம், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.

பொதுத்தேர்வுகளை அந்தந்தப் பள்ளிகளில் நடத்தக் கோரும் வழக்கு


பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை அந்தந்தப் பள்ளிகளில் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு தனி நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி தனபாலன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை அந்தந்தப் பள்ளிகளில் நடத்தாமல் அருகில் உள்ள பள்ளிகளில் நடத்துவதால் தேர்வு நேரங்களில் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், வேறு பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்வதால் சாலை விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மனுவை தனி நீதிபதிக்கு மாற்றி ஆணையிட்டனர்.