1 பிப்., 2015

பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் தலைமையில் போராட்டம்.

ராமநாதபுரம்: அனைவருக்கும் கல்வி இயக்க திருப்புல்லாணி வட்டார வளமைய பட்டதாரி ஆசிரியை தமிழ்மலர். இவர் கடந்த வாரம் 3 நாள் தற்செயல் விடுப்பு எடுத்தார். விடுப்பு மறுக்கப்பட்டநிலையில், 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பத்மாவதியிடம் ஆசிரியர்கள் நேற்று மாலை முறையிட்டனர். உரிய பதிலளிக்காததால், வட்டார வளமைய பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கூடுதல் சி.இ.ஓ., பத்மாவதி கூறினார்.