1 பிப்., 2015

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மனித வள மேம்பாட்டு அமைச்சக குழுவினர் திடீர் ஆய்வு


உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மனித வள மேம்பாட்டு அமைச்சக குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுவது குறித்து 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்கின்றனர். கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை கழக துறை தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் ஒருங்கிணைப்பாளர் பிளசிங்மேரி உட்பட 15 பேர் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு செய்தனர்.
பள்ளியில் செயல்படும் திட்டங்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, கட்டட வசதி, மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவு முறைகள், பொருள் இருப்பு, தேவைப்படும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். பெண்கள் மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடம் கட்டுமான பணிகள் துவங்காதது குறித்து கேட்டனர். மாணவர்களின் கல்வி திறனையும் கேட்டறிந்தனர்.