21 பிப்., 2015

தலா 20 பேருக்கு ஒரு தேர்வறை


பிப்ரவரி 21,2015,11:47 IST
ராமநாதபுரம்: இந்தாண்டு ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 25 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 43 மாணவர்கள், 4 ஆயிரத்து 779 மாணவிகள், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 20 தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 899 மாணவர்கள், 3 ஆயிரத்து 212 மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர்.
தலா 20 பேருக்கு ஒரு தேர்வறை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் மாணவர்களுக்கு தேவையான இருக்கை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுகன்யா ஆய்வு செய்தார். ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலகம், திருவாடானை, தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி வினாத்தாள் மையங்களையும் பார்வையிட்டார்.
தேர்வறையில் மாணவர்கள் மனஅழுத்தம் அடையும் வகையில் கண்காணிப்பாளர்கள் நடந்து கொள்ளக்கூடாது. நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என, அவர் அறிவுறுத்தினார். முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, மாவட்ட கல்வி அலுவலர்கள் சாந்தி, பழனியாண்டி, நேர்முக உதவியாளர்கள் ரெங்கநாதன், மோகன்தாஸ் உடனிருந்தனர்.