21 பிப்., 2015

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை: அரசாணையில் திருத்தம்

Dinamani

By dn, சென்னை

First Published : 21 February 2015 04:37 AM IST
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி 
எம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் ................
வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி. பட்டம் பெற்றால் முதல் ஊக்கத் தொகையும், எம்.எட். அல்லது எம்.பில்., பி.எச்டி. படித்தால் இரண்டாவது ஊக்கத் தொகையும் பெறலாம் என அரசாணை திருத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே இரண்டாவது ஊக்கத் தொகை பெறும் வகையில் இருந்தது. தலைமையாசிரியர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தத் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தை வெளியிட்டதற்காக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.