8 பிப்., 2015

இரங்கல்

திரு.முத்துவேல் 

       சிவகங்கை மாவட்டம் சண்முகநாதபுரம் பள்ளித் தமிழாசிரியர் திருமதி ரேவதி அவர்களின் மகன் சட்டம் பயின்று கொண்டிருந்த திரு.முத்துவேல் இரத்தப்புற்றுநோய் காரணமாக 04.02.2015 அன்று மரணமடைந்தார்.
நமது மாநிலச் செயலர் திரு. நீ.இளங்கோ மற்றும் சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்கள் நாகேந்திரன், புகழேந்தி, கரிகாலன் ஆகியோர் நேரில் சென்று தமிழாசிரியர் திருமதி. இரேவதி அவர்களுக்கு ஆறுதலும் அவர்கள் தனது மகன் பெயரில் ஆரம்பிக்க உள்ள இரத்தப்புற்றுநோய் விழிப்புணர்வு அறக்கட்டளைக்கு ஒத்துழைப்பையும் தெரிவித்து வந்தனர்.திரு.ஜி.எஸ்.துரைராஜ்

        சிவகங்கை மாவட்டம் புளியால் அரசு உயர்நிலைப்பள்ளித் தமிழாசியர் திருமதி. விண்ணரசி அவர்களின் தந்தையாரும் ஆசிரியருமான திரு.ஜி.எஸ்.துரைராஜ் அவர்கள் 06.02.2015 அன்று மரணமடைந்தார். நமது மாநிலச் செயலர் திரு. நீ.இளங்கோ மற்றும் சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்கள் நாகேந்திரன்,  கரிகாலன் ஆகியோர் நேரில் சென்று தமிழாசிரியர் திருமதி. விண்ணரசி  அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் திரு.ஜி.எஸ்.துரைராஜ் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டும் வந்தனர்.