23 மே, 2015

கயானா நாட்டின் பிரதமராக தமிழர்

மோசஸ் வீராச்சாமி நாகமுத்து  - கயானாவின் புதிய பிரதமர்


             தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்று, அதன் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோசஸ் வீராச்சாமி நாகமுத்து என்பவர் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர். வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களில் இவரது மூதாதையர்களும் அடக்கம் . பல தலைமுறைகளுக்குப் பிறகு  அந்த நாட்டை ஆளும் வாய்ப்பு தமிழருக்குக் கிடைத்துள்ளது .
                  இதுவரை தமிழர்கள் யாரும் இந்தியா உட்பட எந்த நாட்டிற்கும் பிரதமரானதில்லை. சிங்கப்பூர் ஜனாதிபதியாக எஸ்.ஆர் நாதன் என்ற தமிழர் இருந்திருக்கிறார். துணைப் பிரதமர், அமைச்சர்கள் என்ற அளவில் மற்ற நாடுகளில் தமிழர்கள் பதவி வகித்துள்ளனர். பிரதமர் பொறுப்பேற்கும் முதல் தமிழர் என்ற பெருமை கயானாவின் மோசஸ் வீராச்சாமி நாகமுத்து மூலம் தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது.
 நன்றி - நக்கீரன் 2015 மே 23 - 26  vol.28. No.11