9 ஏப்., 2015

தமிழக வரலாற்றில் முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறையின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ISO 9001:2008 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தமிழாய்வாளர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களின் உணர்வாற்றல் மிகவும் போற்றத்தக்கது. ஆசிரியர்களின் உணர்வும் அவரின் உணர்வும் சமக்கோட்டில் பயணிக்கும் காணவியலாப் பேருண்மையை நீங்கள் புதுக்கோட்டையில் காணலாம். புன்னகையால் பணிஏவல் புரியும் உன்னதப்பாங்கினை புதுக்கோட்டை தலைமைப்பண்பில் கண்டு நீங்கள் மகிழ்வடையலாம்.


தொழில்நுட்பப் பயன்பாட்டின் காலத்தேவையை உணர்ந்தவர் ஐயா அருள்முருகன் அவர்கள். மின்னாளுமையின் மேன்மை இயக்கம்............

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது


எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2015-ஆம் ஆண்டில்
நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இணையதள விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை இணைக்க வேண்டும். இதற்கு தத்தகல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை 
விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி 
இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். பள்ளிக்கூடங்கள் தமிழ்நாடு 
முழுவதும் 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து750
நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. 5 ஆயிரத்து 602 உயர்நிலைப்பள்ளிகளும், 6 
ஆயிரத்து 299 மேல்நிலைப்பள்ளிகளும் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் 6 
லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் வேலைபார்க்கிறார்கள்.
 ஒரு கோடியே 40 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.பிளஸ்-2 தேர்வு 
கடந்த மார்ச் மாதம் தொடங்கி மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. 
தேர்வு கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. அந்த தேர்வு 
நாளை (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடைகிறது. 
ஏற்கனவே பிளஸ்-1 தேர்வு நடந்து முடிந்துவிட்டது. 6-வது முதல் 8-வது வகுப்பு
வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேர்வு வருகிற 20-ந் தேதிமுடிவடைகிறது. 
ஜூன் 1ஆம் தேதி திறக்கின்றன ஆனால் 22ஆம் தேதி அரசு உயர்நிலைப்பள்ளிகள்,
அரசு மேல்நிலைப்பள்ளிகள் முடிவடைகின்றன. 23ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி 
முடிய கோடை விடுமுறையாகும். தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்
பள்ளிகளுக்கு 30ஆம் தேதி வரைபள்ளிக்கூடங்கள் செயல்பட உள்ளன.
 அந்த பள்ளிக்கூடங்களுக்கு மே மாதம் 1ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி
 வரை கோடை விடுமுறை விடப்பட உள்ளது.தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்
பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் கோடை 
விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1ஆம் தேதி திறக்கின்றன. இந்தத் தகவலை 
பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது.எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 10-ஆம் தேதி வரை இத்தேர்வு நடைபெறுகிறது. இதன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20-ஆம் தேதி
தொடங்குகிறது.

4 ஏப்., 2015

அனைத்து பள்ளிகளும் தமிழ் மொழி பாடம் கற்றலை நடைமுறைப்படுத்த ஆணை

தின மலர் கல்வி மலர் மார்ச் 29,2015,11:09 IST


சென்னை: "நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளும், கட்டாயமாக தமிழ் மொழி பாடம் கற்றலை, முதல் வகுப்பில், நடைமுறைப்படுத்த வேண்டும்" என, அரசு உத்தரவிட்டுள்ளது.
"பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன" என, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 2015-16ம் கல்வியாண்டில் இருந்து, முதல் வகுப்பில் தொடங்கி, படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது......

துறைத்தேர்வு முடிவுகள் டிசம்பர் 2014

இங்கே சொடுக்கவும்
 துறைத்தேர்வு முடிவுகள் டிசம்பர் 2014

Results of Departmental Examinations - DECEMBER 2014
(Updated on 27th March 2015)
Enter Your Register Number :                                                         


"கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி தேவை'

கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வழி கற்றல் முறை அவசியம் என்று இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டி.முத்துசாமி தெரிவித்தார்.


கற்றல் திறன் குறைபாடு (டிஸ்லெக்சியா) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..........

பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

நன்றி 
தி ஹிந்து

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முன்னிட்டுப் பலவித சோதனைகளைக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் விதவிதமான பலபரீட்சைகளைப் பிரயோகித்து வருகிறார்கள். எல்லாம் சரி. யாருக்காக? எதற்காக? என்பதுதான் முக்கிய விஷயம்.

கற்றல் திறன் குறைவான மாணவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி, ............

3 ஏப்., 2015

தாய்மொழி வழி கல்வி கர்நாடகத்தில் சட்டமானது: மொழி தீவிரம் காட்டும் தமிழகத்தின் நிலை என்ன?

தாய்மொழி வழி கல்வி கர்நாடகத்தில் சட்டமானது: மொழி தீவிரம் காட்டும் தமிழகத்தின் நிலை என்ன?  
03.04.2015ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி கன்னடம் தான் பயிற்று மொழி; 10ஆம் வகுப்பு வரை, கன்னடம் கட்டாய மொழிப் பாடம் என்ற, சட்ட திருத்தத்தை, கர்நாடகா அரசு நிறைவேற்றியுள்ளது
 தீவிரமான மொழிக் கொள்கையை கொண்டுள்ளதாக, மார் தட்டும் தமிழகத்தில், தாய்மொழி தமிழும் தெரியாத, ஆங்கிலமும் புரியாத ஒரு தலைமுறை உருவாகி விட்டது. இதற்கு என்ன காரணம், அடிப்படைக் கல்வியைக் கூட, தமிழில் கற்றுத் தர முடியாத அவலம் இங்கு நீடிப்பது ஏன் என்பது குறித்து, கல்வியாளர்கள், முன்னாள் அமைச்சர், தமிழ்மொழி உரிமை கோருபவர்களின் கருத்துக்கள்:
பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு: ..........

தமிழை மதித்த பிரதமர்! தேசத்தைச் செதுக்கிய சிற்பி லீ குவான் யூ

தமிழை மதித்த பிரதமர்!

இரா. செழியன்

26 March 2015 01:18 AM IST
லீ குவான் யூ 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை அவர் ஒரு மாபெரும் பொருளாதார, ஜனநாயக நாடாக மாற்றினார்.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் சீனர்கள் 77 விழுக்காடு, மலாய் இனத்தவர்கள் 14 விழுக்காடு, தமிழர்கள் 6 விழுக்காடு இருந்து வருகிறார்கள்.
ஆயினும், சிங்கப்பூர் ஆட்சிமொழிகளாக சீனம், மலாய், ஆங்கிலம் தமிழ் என்ற வகையில் பிரதமர் லீ குவான் யூ அரசமைப்புச் சட்டத்தை வகுத்தார்.
அண்ணாவை வரவேற்றவர், தமிழுக்கு மிகவும் மதிப்புத் தந்தவர் லீ குவான் யூ. அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

தேசத்தைச் செதுக்கிய சிற்பி

மலேசியாவுடனேயே சேர்ந்து வாழ்ந்துவிடுகிறோம் என்று அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரகுமானிடமும் துணைப் பிரதமர் அப்துல் ரசாக்கிடமும் லீ குவான் யூ மன்றாடிக் கேட்டுக் கொண்டும்,.......

புதிய கல்வி முறை என்னும் பூதம்

புதிய கல்வி முறை என்னும் பூதம்

01 April 2015 01:45 AM IST
அறிவுத்திறனுக்கு ஊற்றுக்கண்ணாவது கல்வி. தற்போதைய நமது கல்வி முறையில் ஒரு மாணவன் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் என அய்ந்து பாடங்களைப் பயில வேண்டும்.
ஒவ்வொரு வகுப்பிலும் 5 பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். ஐந்தில் ஒன்று பழுதானாலும் தேர்ச்சி பெறுதல் இயலாது. 11, 12 வகுப்புகளில் மொழிப்பாடங்கள் இரண்டு, பிற பாடங்கள் நான்கு என ஆறு பாடங்கள். ஆறு முகங்களில் ஒருமுகம் கோணினாலும் அவன் கல்லூரி முகத்தைக் காண வியலாது.
பட்டப்படிப்பிலும் மொழிப்பாடங்கள். மேலும் சில பாடங்கள். அவற்றுள் ஒன்று தவறினாலும் பட்டம் பெறும் லட்சியம் பட்டுப்போகும். மெட்ரிக், நவோதயா, மத்திய தேர்வாணையப் பள்ளி என எல்லாவற்றிலும் மொழிப்பாடங்கள் சில பிற பாடங்கள் சில அனைத்திலும் தேர்ச்சி கட்டாயம் என்பதில் மாற்றமில்லை.
முனைவர் மு.வ. ஒரு நூலில் மாணவர்களின் மொழிச் சுமை பற்றிக் கூறும்போது கணித மேதை இராமானுசம் கல்லூரி இடைநிலை வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறாத காரணத்தால் பட்டப்படிப்பில் சேரமாட்டாது துறைமுக அலுவலக எழுத்தர் பணியை ஏற்க நேர்ந்ததைச் சுட்டுகின்றார்.........

வாழ்க்கையை அறியும் கல்வி

வாழ்க்கையை அறியும் கல்வி

13 March 2015 01:25 AM IST
நன்றி தினமணி
இந்தியாவை அறிவு சார்ந்த வல்லரசாக உருவாக்கவும், அறிவியல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளிலும் தேவைகளை நிறைவு செய்யவும் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கல்வி என்பதை சொத்துரிமையைப்போல அடிப்படை உரிமையாக்கி, இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டத்தை ஏற்படுத்தி, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி, பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி, கல்லூரிக் கல்விவரை .........

தமிழில் வருமா குறுந்தகவல்கள்?

தமிழில் வருமா குறுந்தகவல்கள்?

ஆர்.எஸ். கார்த்திகேயன்

First Published : 03 April 2015 01:53 AM IST

நன்றி தினமணி
    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் புழக்கத்தில் கணினியில் பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழ் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றுள்ளது என்றே கூறவேண்டும்.
தமிழ்ச் சான்றோர், தமிழ் ஆர்வலர்கள், கணினிப் பொறியாளர்களின் முயற்சியால் ஆங்கிலம் உள்ளிட்ட அன்னிய மொழிகள் பலவற்றுக்கும் இணையாகத் தமிழ் மொழியும் கணினிப் பயன்பாட்டில்.........