23 பிப்., 2015

1 முதல் 5ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் கட்டாயமாக தமிழில் கற்க உத்தரவிட வேண்டும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை

logo
திங்கட்கிழமை, பிப்ரவரி 23, 2015
சிவகங்கை
1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் கட்டாயமாக தமிழில் கற்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசிற்கு தமிழாசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை

21 பிப்., 2015

தமிழை வழக்காடு மொழியாக்க வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

Return to frontpage

தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும்: தமிழறிஞர் தமிழண்ணல் வலியுறுத்தல்

Published: February 21, 2015 09:44 IST
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசுகிறார் தமிழறிஞர் தமிழண்ணல்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசுகிறார் தமிழறிஞர் தமிழண்ணல்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நீதிபதிகளும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழறிஞர் தமிழண்ணல் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்கிற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை....................

10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை மார்ச் 4க்குள் முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

சென்னை: இந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம் தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அதிகாரிகள், வழிகாட்டுதல் வழங்குகின்றனர்.
கடந்த 2011 - 12ம் கல்வியாண்டில், சமச்சீர்க் கல்வி மற்றும் புதிய பாடத்திட்டம் அறிமுகமானதால், 10ம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கு ..........

அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருந்த சிறப்பாசிரியர்களுக்கு அதிர்ச்சி


பிப்ரவரி 21,2015,11:03 IST
கோவை: மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், பணியாற்றி வந்த சிறப்பாசிரியர்கள், பணிநிரந்தர அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், புதிய சிறப்பாசிரியர்கள் நியமன அறிவிப்பு, தொகுப்பூதிய ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், 2009-ம் ஆண்டு முதல்..................

தலா 20 பேருக்கு ஒரு தேர்வறை


பிப்ரவரி 21,2015,11:47 IST
ராமநாதபுரம்: இந்தாண்டு ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 25 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 43 மாணவர்கள், 4 ஆயிரத்து 779 மாணவிகள், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 20 தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 899 மாணவர்கள், 3 ஆயிரத்து 212 மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர்.
தலா 20 பேருக்கு ஒரு தேர்வறை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் மாணவர்களுக்கு தேவையான இருக்கை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுகன்யா ஆய்வு செய்தார். ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலகம், திருவாடானை, தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி வினாத்தாள் மையங்களையும் பார்வையிட்டார்.
தேர்வறையில் மாணவர்கள் மனஅழுத்தம் அடையும் வகையில் கண்காணிப்பாளர்கள் நடந்து கொள்ளக்கூடாது. நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என, அவர் அறிவுறுத்தினார். முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, மாவட்ட கல்வி அலுவலர்கள் சாந்தி, பழனியாண்டி, நேர்முக உதவியாளர்கள் ரெங்கநாதன், மோகன்தாஸ் உடனிருந்தனர்.

உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர முடியாமல் தவிப்பு


தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் இளங்கோ
சிவகங்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் தேர்வான பலர், அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவிபெறும் பள்ளியில் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
2011க்கு பின் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியில் சேர தகுதித்தேர்வு தேர்ச்சி பெறுதல் அவசிய மாக்கப்பட்டது. கல்வித் தகுதி அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்ட நிலையில், தகுதித்தேர்வை எழுதி தேர்வான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பலர் பணியில் சேர முடியாத நிலை உள்ளது.
தகுதித்தேர்வு சான்றுகளின் உண்மைத் தன்மை தேவை எனக் கூறி பள்ளி நிர்வாகங்கள் மறுப்பதால் அதற்கான சான்றை பெற, சி.இ.ஒ., மற்றும் சென்னை டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அலைவதாக புகார் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிலர் கூறுகையில், "அரசு பள்ளிகளில் தகுதித்தேர்விற்கான உண்மைத்தன்மை கேட்கவில்லை. அரசு உதவிபெறும் பள்ளிகளில் கேட்கின்றனர். உண்மை தன்மையை பெற டி.ஆர். பி.,யை அணுகினால், சரியான பதில் இல்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலைக்கு செல்ல முடியவில்லை" என்றனர்.
தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் இளங்கோ கூறுகையில், "கல்வித்தகுதிக்கு மட்டுமே உண்மை தன்மை தேவை. தகுதித்தேர்விற்கு தேவையில்லை. இதை பொறுத்தவரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒரே நடைமுறைதான். இதிலுள்ள முரண்பாட்டை டி.ஆர்.பி., களைய வேண்டும், என்றார்.

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை: அரசாணையில் திருத்தம்

Dinamani

By dn, சென்னை

First Published : 21 February 2015 04:37 AM IST
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி 
எம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் ................

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க...

By சா. பன்னீர்செல்வம்
First Published : 21 February 2015 01:36 AM IST
இமயம் முதல் குமரி வரையும் விரிந்து கிடக்கும் பெருநிலப்பரப்பு பல்வேறு மொழிப் பகுதிகளாகவும், நூற்றுக்கணக்கான ஆட்சிப் பகுதிகளாகவும் இருந்த நிலையில், பெருநிலப்பரப்பு முழுவதையும் ஒரே அரசு - ஒரே ஆட்சிமுறை என்னும் ஆட்சியதிகாரத்திற்குள்பட்ட ஒரே நாடாக ஆக்கி, அதற்கு இந்தியா என்னும் பெயரையும் வழங்கியோர் ஆங்கிலேயர்.
அதற்கு முந்தைய தமிழ், வடமொழி நூல்களில் இந்து என்னும் சொல்லாட்சியில்லை. ......................

20 பிப்., 2015

பொதுத்தேர்வை நேர்மையாக நடத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்த தேர்வுத்துறை

சென்னை: பிளஸ் 2 தேர்வில், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், சம்பந்தப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு முடியும் வரை, பள்ளி வளாகங்களில் இருக்கக்கூடாது; அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும்.............

தேர்வுப் பணிகளில் துறை அலுவலர் பொறுப்பிலுள்ள மொழிப்பாட ஆசிரியர்களை நீக்க நடவடிக்கை

மொழிப்பாட ஆசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன்
மதுரை: பிளஸ் 2 தேர்வுப் பணிகளில் துறை அலுவலர் பொறுப்பு வகிக்கும் மொழிப்பாட ஆசிரியர்களை நீக்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மார்ச் 5ல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. முதன்மை கண்காணிப்பாளர் பணிக்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், துறை அலுவலர் பொறுப்புக்கு மூத்த முதுநிலை ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை குழுவிற்கு முதுநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்பட்டு, அவர்களின் விவரங்கள் மாவட்டம் வாரியாக தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றில் துறை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ், ஆங்கில பாட மூத்த ஆசிரியர்கள் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில் மாற்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய பட்டியலை தேர்வுத் துறை கோரியுள்ளது.
மொழிப்பாட ஆசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் கூறியதாவது: மொழிப் பாட தேர்வுகள் முடிந்த உடன், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்துவதற்காக தேர்வுப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறுகின்றனர்.
இந்த நீக்கத்தால் நாங்கள் தகுதி இல்லாதவர் என முத்திரை குத்தப்படுவோம். விடைத்தாள் பணிக்கு மூத்த மொழிப்பாட ஆசிரியர் தேவையென்றால், அவர்களை தவிர பிற மொழிப்பாட ஆசிரியர்களை தேர்வுப் பணியில் ஈடுபடுத்தலாம். தேர்வுத்துறை இந்த நடவடிக்கையை பரிசீலிக்க வேண்டும், என்றார்.
நன்றி தினமலர் இமலர் கல்விமலர்
பிப்ரவரி 18,2015,11:59 IST

19 பிப்., 2015

உலகத் தாய்மொழி நாள்: பிப்ரவரி 21

மனிதனுக்குக் கிடைத்த வரம்
உலகத் தாய்மொழி நாள்: பிப்ரவரி 21
நமது அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதவற்றில் ஒன்று மொழி. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஏதோ ஒரு வகையில் மொழி உள்ளது. பேச்சு, எழுத்து, குரல் வழியாக (வானொலி),......................

அறிவோம் நம் மொழியை: நீருயர மொழியுயரும்

சென்ற வாரம் நீர்நிலைகளின் வகைகளில் சிலவற்றைப் பார்த்தோம். இப்போது நீரின் இயக்கம், செயல் சார்ந்த வினைச் சொற்களைப் பார்க்கலாம். இவற்றில் சில சொற்கள் நீருக்கு மட்டு மல்லாமல் மற்ற திரவங்களுக்கும் திடப் பொருட்களுக்கும் பொருந்தும்.

குழந்தைகள் மீது அத்துமீறல்கள் நடைபெறும்போது அரசு அமைப்புகளின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது: முனைவர் வசந்தி தேவி குற்றச்சாட்டு

யுனிசெப் அமைப்பின் குழந்தை பாதுகாப்பு சிறப்பு அலுவலர் வித்யாசாகர் கூறும்போது, “நாட்டில் குழந்தைகளுக்கு முழுமையாக கல்வி உரிமை கிடைக்கவில்லை. இதன் காரணமாக 15 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளில் 50 சதவீத பேர் பள்ளியில் இருந்து இடை நிறுத்தம்........

உ. வே. சாமிநாத ஐயர் 10

உ. வே. சாமிநாத ஐயர்

உ. வே. சாமிநாத ஐயர்
தமிழ் மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவரும், தமிழ் தாத்தா என்று போற்றிக் கொண்டாடப்படும் தமிழறி ஞருமான உ. வே. சாமிநாத ஐயர். பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 19). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :...............

17 பிப்., 2015

தமிழ்த் தேர்வில் தாராள மதிப்பெண் பெற

Published: February 17, 2015 12:16 IST                                                                    Updated: February 17, 2015 12:16 IST                                                  தமிழ்த் தேர்வில் தாராள மதிப்பெண் பெற

எதிர்காலத்தில் என்ன படிப்பு படிக்கப் போகிறோம் என்பதற்கான அச்சாரம் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்தே பெருமளவு முடிவு செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலே, வாய்ப்புகள் திறந்து கிடக்கும் உயர்கல்வியில் காலடி எடுத்து வைக்க முடியும். முக்கியத்துவம் வாய்ந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல் இந்த வாரம் முதல் தொடங்குகிறது.

பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் அதிக அளவு மதிப்பெண் பெறவும், தேர்ச்சி பெறவும் வழிகாட்டுகிறார் தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பட்டதாரி தமிழ் ஆசிரியர் இரா.தாமோதரன்..........

தேர்வைக் கண்காணிக்க 3 ஆண்டுகளாக ஒரே அலுவலர் - தனியார் பள்ளிகளில் என்னதான் நடக்கிறது?

சேலம்: பொதுத்தேர்வைக் கண்காணிப்பதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு மட்டும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இணை இயக்குநர் பழனிச்சாமியை நியமித்திருப்பது, பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது.
அரசு தேர்வுத்துறை, பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்துவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், பொதுத் தேர்வைக் கண்காணிப்பதற்காக, மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகளை நியமித்து, அதற்கான பட்டியலை, தேர்வுத்துறை வெளியிட்டது.
பட்டியல்
அதன்படி, தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் - சென்னை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குநர் அறிவொளி - காஞ்சிபுரம்,........

வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தேர்வுத்துறை
பரமக்குடி: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 5இல் துவங்குகின்றன. விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது. விடைத்தாள் பயன்படுத்தும்........

சர்வதேச ஆசிரியர் விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்திய ஆசிரியர்அகமதாபாத்தைச் சேர்ந்த, ஆசிரியை கிரண் பிர் சேத்தி, சர்வதேச ஆசிரியர் விருதுக்கான இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
துபாயைச் சேர்ந்த வர்கி அறக்கட்டளை,........

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குப் பணிவரன்முறை

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா?

              
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்கள் 

14 பிப்., 2015

பணிவரன்முறை

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள் தொடக்கக் கல்வி அலகில் கரூர், திருப்பூர், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பணிபரிபவர்கள் நீதி மன்றஅறிவுறுத்தலின் பேரில் நியமன நாளின் போதே பணிவரன்முறை செய்ய அரசாணை பெற்றுள்ளனர். அரசாணை படிகள் மூன்று பக்கங்கள் நமது வலைப்பூவில் பணிவரன்முறைஆணைகள்  பக்கத்தில் காணுங்கள்.

10 பிப்., 2015

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டிய உதவித் தொகை வலைதளங்கள்

கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை.

INCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்

Income Slabs Tax Rates 


i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

முதுகலை ஆசிரியர் தேர்வு - சான்றிதழ் சரிப்பார்ப்புக்கான இடம், தேதி விவரம்

8 பிப்., 2015

இரங்கல்

திரு.முத்துவேல் 

       சிவகங்கை மாவட்டம் சண்முகநாதபுரம் பள்ளித் தமிழாசிரியர் திருமதி ரேவதி அவர்களின் மகன் சட்டம் பயின்று கொண்டிருந்த திரு.முத்துவேல் இரத்தப்புற்றுநோய் காரணமாக 04.02.2015 அன்று மரணமடைந்தார்.
நாகேந்திரன், புகழேந்தி, கரிகாலன் ஆகியோர் நேரில் சென்று தமிழாசிரியர் திருமதி. இரேவதி அவர்களுக்கு ஆறுதலும் அவர்கள் தனது மகன் பெயரில் ஆரம்பிக்க உள்ள இரத்தப்புற்றுநோய் விழிப்புணர்வு அறக்கட்டளைக்கு ஒத்துழைப்பையும் தெரிவித்து வந்தனர்.திரு.ஜி.எஸ்.துரைராஜ்

        சிவகங்கை மாவட்டம் புளியால் அரசு உயர்நிலைப்பள்ளித் தமிழாசியர் திருமதி. விண்ணரசி அவர்களின் தந்தையாரும் ஆசிரியருமான திரு.ஜி.எஸ்.துரைராஜ் அவர்கள் 06.02.2015 அன்று மரணமடைந்தார்.  நாகேந்திரன்,  கரிகாலன் ஆகியோர் நேரில் சென்று தமிழாசிரியர் திருமதி. விண்ணரசி  அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் திரு.ஜி.எஸ்.துரைராஜ் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டும் வந்தனர்.

6 பிப்., 2015

மார்ச்-8-ஆம் தேதி நடைபெறும் ஜாக்டோ ஆசிரியர் கூட்டமைப்புப் பேரணியில் தமிழகத் தமிழாசிரியர் கழகம் பங்கேற்பு

கோரிக்கைகள்:
1) 6ஆவது ஊதியக்குழுவில், மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், தமிழக அரசின் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இப்பிரிவினர் அனைவருக்கும் தமிழக அரசு வழங்கிட வேண்டும்.

2) 6ஆவது ஊதியக்குழுவில், மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ள அனைத்துப்படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

3) அகவிலைப்படி 100 விழுக்காடு அளவைக் கடந்துவிட்டதால், 50 விழுக்காடு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்கவேண்டும்.

4) 2011 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை காலத்தில் வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப, தமிழக அரசு தன் பங்கேற்பு (CPS) ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.


உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

சிங்கப்பூர், 

14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் மே 30 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறுகின்றது. 


இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி

2 பிப்., 2015

புத்ததாண்டு வாழ்த்துகள்

மந்தணம்
நினைவூட்டு  மிகவும் அவசரம் தனிக்கவனம்
வரைவுத் தணிக்கைத் தடை நிவர்த்திக்கான விரைவுச் செயல்முறைகள்
ஓ.மு.எண்: 311213/மு.ஆ.1/2014  நாள்: 01.01.2015
மார்கழி 17 திருவள்ளுவர் ஆண்டு 2045
*****
               பொருள்: ஆண்டுகளின் சந்திப்பு - அலுவல்களின் அடைவு எல்லை -                                            மந்தணம் பகிர்தல் – தார்மீகப் பரிமாறுதல் – சார்பு.
               பார்வை:    ஒருங்கிணைப்புக் கூட்டம் இதே எண், நாள்: 31.12.2013
                                   2. தொடர்புடைய ஆவணங்கள் இதே எண், நாள்:  31.12.2014
!!!!!
             ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டின் போதும் சார்நிலை அலுவலர்கள் தம் உயர் அலுவலர்களைச் சந்தித்துப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது மரபு. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய இந்த மரபு இப்போதும் தொடர்கிறது. இதற்கு மறுதிசையில் வாழ்த்துக்களைப் பரிமாறிய காலமுறைப் பதிவு மறுகவனிப்புக்காக இங்கு முன்வைக்கப்படுகிறது.
         ஒரு மலர் அழகுடன் பூத்திருப்பது வண்ணமயமான அதன் இதழால் மட்டும் அல்ல....
தொடர்ந்து படிக்க ....

http://nadainamathu.blogspot.com/2015/01/blog-post_17.html#more

படைப்பு - முனைவர். அருள்முருகன்
                   முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்
                    புதுக்கோட்டை

நன்றி: காக்கைச் சிறகினிலே ஜனவரி 2015

"குழந்தை மொழியை அறியாதவர்களால் குழந்தைகளுக்குக் கற்பிக்க இயலாது'


ஆசிரியர் பயிற்சியில் கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-பிப்.1 குழந்தைகளுக்கு ஆசிரியரைப் பிடித்துவிட்டால் அவர் நடத்தும் பாடங்களை விரும்பிப் படிப்பார்கள்ஒருவேளை ஆசிரியர்கள் வெறுக்கும்படி இருந்தால் அந்தப் பாடத்தையும் குழந்தைகள் வெறுக்கத் தொடங்கிவிடுவர்.எனவேகுழந்தைகளுக்குப் பிடித்த ஆசிரியர்களாக இருப்பது முக்கியம்“ என்று சொன்னார் கவிஞர் நா.முத்துநிலவன்.

தொடர்ந்து படிக்க...
http://valarumkavithai.blogspot.com/2015/02/blog-post.html
------------------------------------------------
நன்றி - தினமணி, தீக்கதிர் -01-02-2015 திருச்சிப்பதிப்பு
செய்தியாளர்கள் --
திரு இரா.மோகன்ராம், தினமணி, புதுக்கோட்டை,
திரு சு.மதியழகன், தீக்கதிர், புதுக்கோட்டை
புகைப்படம் - டீலக்ஸ் ஞானசேகரன், புதுக்கோட்டை
------------------------------------------------
நன்றி- வளரும் கவிதை வலைப்பூ

வரும் 14ஆம் தேதி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுகள்

தமிழக தட்டச்சுப் பயிலகங்கள் சங்கங்களின் மாநில பொதுச்செயலாளர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின், தொழில்நுட்பக் கல்வித்துறை மூலமாக நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வுகள், பிப்., 14ஆம் தேதி தொடங்குகிறது.

1 பிப்., 2015

"சிந்துவெளி நாகரிக வீழ்ச்சிக்குப் பின் அதன் மக்கள் தென்னிந்தியாவில் குடியேறி இருக்கலாம்"


ஜனவரி 31,2015,10:49 IST
தஞ்சாவூர்: "சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சிக்குப் பின், அங்கிருந்த மக்கள், தென்னிந்தியாவில் குடியேறி இருக்கலாம்" என, தொல்லியல் துறை மண்டல இயக்குனர் தயாளன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலையில், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. பல்கலை துணைவேந்தர் திருமலை தலைமை வகித்தார்.
தமிழக பண்பாட்டில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் என்ற தலைப்பில், தொல்லியல் துறை மண்டல இயக்குனர் (மும்பை) தயாளன் பேசியதாவது: தமிழகத்தில், தொல் பழங்கால தொல்லியல் இடங்கள் பல, காணக் கிடைத்துள்ளன. இதன்மூலம், தொல் பழங்கால மக்கள்,

பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் தலைமையில் போராட்டம்.

ராமநாதபுரம்: அனைவருக்கும் கல்வி இயக்க திருப்புல்லாணி வட்டார வளமைய பட்டதாரி ஆசிரியை தமிழ்மலர். இவர் கடந்த வாரம் 3 நாள் தற்செயல் விடுப்பு எடுத்தார். விடுப்பு மறுக்கப்பட்டநிலையில், 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.