6 பிப்., 2015

உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்துகிறது சிங்கப்பூர்

சிங்கப்பூர், 

14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் மே 30 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறுகின்றது. 


இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி
வல்லுநர்கள் வருகை தர உள்ளனர். 'உலகத் தமிழ் தகவல்தொழில்நுட்ப மன்றம்' என்ற அமைப்பு உலகின் பல நாடுகளில் அரசுடனும் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து இந்த தமிழ் இணைய மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது. 
இந்தியா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க் கணினி வல்லுநர்கள் கலந்துகொண்டு இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிக்கின்றனர். சிறப்பு அமர்வுகளில் கணினி வல்லுநர்கள், இண்டர்நெட், செல்போன் கருவிகளில் தமிழின் பயன்பாடு பற்றி சிறப்பு கருத்தரங்குகள் நடத்த உள்ளனர்.