30 டிச., 2014

தமிழாசிரியர் முழக்கம்


காஞ்சிபுரம் செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் நமது கழகத்தின் போர்க்குரல் “தமிழாசிரியர் முழக்கம்” மாநிலப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளையும் மாவட்டக் கழகச் செய்திகளையும் புதிய புதிய கருத்துப் பேழைகளையும் தமிழாசிரியர்களின் படைப்புகளையும் தமிழகத் தமிழாசிரியர்கள்  அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தூதுவனாக விரைவில் உங்கள் கையில்…
 உங்களின் சிறந்த படைப்புகள், போட்டித் தேர்வுகளுக்கான வினா விடைத் தொகுப்புகள், கலைச்சொல்லாக்கங்கள் இவற்றை அனுப்பி இதழுக்கு உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள். “தமிழாசிரியர் முழக்கம்” சங்க இதழாக மட்டும் இல்லாமல் படைப்பிலக்கிய இதழாக, உலகத் தமிழர்களின் அடையாள ஆவணமாக, போட்டித் தேர்வாளர்களின் கலைக்களஞ்சியமாக மாற உங்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.