30 டிச., 2014

அமைதிக்கான நோபல் பரிசு

கைலாஷ் சத்யார்த்தி, மலாலா
அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த
 கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான்
 பெண் மலாலாவுக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி. பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலாவுக்கு 2014-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு .............
அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெறும் 7-ஆவது இந்தியர் என்ற பெருமையை, கைலாஷ் சத்யார்த்தியும், மிக இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுபவர் என்ற பெருமையை மலாலாவும் பெற்றுள்ளனர். கைலாஷ் சத்யார்த்தி  மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி பிறந்தார். 1990-ஆம் ஆண்டு "பச்பன் பச்சாவோ ஆந்தோலன்' (குழந்தையைப் பாதுகாப்போம் இயக்கம்) என்ற அமைப்பை நிறு விய இவர் நாட்டில் குழந்தைத்  தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறார். இந்த அமைப்பு மூலம் இதுவரை இந்தி யாவில் 80 ஆயிரம் குழந்தைகளை பல்வேறு சுரண்டல்களில் இருந்து மீட்டு, அவர்கள் கல்வி கற்க உதவியுள்ளார். தற்போது கைலாஷ் சத்யார்த்தி டெல்லியில் வசித்து வருகிறார். கைலாஷ் சத்யார்த்தி இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் செயல்பாடுகள் தவிர, வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவின்மை, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினராக உள்ள கைலாஷ் சத்யார்த்தி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உரிமை என்பதை வலியுறுத்தி வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் நோபல் பரிசு பெறும் 7-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கைலாஷ் சத்யார்த்தி. மேலும், அன்னை தெரசாவுக்கு அடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர், அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் இந்தியாவில் பிறந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெறுகிறார். கைலாஷ் சத்யார்த்தியுடன், 2014-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் குழந்தைகள் கல்வி உரிமைப் போராளி சிறுமி மலாலா யூசுப்சாய் (17) பகிர்ந்துகொள்கிறார். பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் மிங்கோரா பகுதியில் 1997-ஆம் ஆண்டு சூலை 12-ஆம் தேதி பிறந்தவர் மலாலா யூசுப் சாய். பாகிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காகப் போராடியதால், தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் மலாலா தற்போது, பிரிட்டனில் வசித்து வருகிறார்.