30 டிச., 2014

‘பால சாகித்ய புரஸ்கர் விருது’ - 2014

”ஆயிஷா”நடாராஜன்

ஆயிஷா”  நுாலின் ஆசிரியர்  திரு. இரா.நடாராஜன் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டுகான ‘பால சாகித்ய புரஸ்கர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. பால சாகித்ய புரஸ்கர் விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருது. இவருக்கு  ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
இவர் சிறுவர் இலக்கியங்கள், கல்வி குறித்து நிறைய நுால்கள் எழுதியுள்ளார்.

பிறப்பு 1964

இவரது ஆயிஷா.................
எனும் குறுநாவல் (பள்ளிக்கூட சிறுமியின் துயரக்கதை) தமிழில் ஒரு லட்சம் படிகள் விற்று சாதனை படைத்தது.  கல்வித் துறையில் பல புதிய மாற்றங்களை அது முன்மொழிந்ததுஇ
சிறந்த கல்வியாளராக அறியப்பட்டுள்ள இவர் சமீபத்தில் எழுதிய ‘இது யாருடைய வகுப்பறை’ எனும் புத்தகம் சென்னை புத்தக கண்காட்சி உட்பட தமிழகத்தின் புத்தக கண்காட்சிகளில் தொடர்ந்து விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

அறிவியல் புனை கதைகள் 

1. சர்க்கஸ் டாட்காம்
2. பூஜ்ஜியமாம் ஆண்டு 
3. விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்
4. பூமா 
5. விண்வெளிக்கு ஒருபுறவழிசாலை. 

நாவல்கள் 1. நாகா 

           2. மலர் அல்ஜிப்ரா
           3. ரோஸ் 
           4. ஒரு தோழனும் மூன்று நண்பர்களும் 
           5. ஒரு தோழியின் கதை
           6. ரஃப் நோட்டு

பிற விருதுகள்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது  - கணிதத்தின் கதை 
பணி தலைமை ஆசிரியர்
      கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
      கடலூர்

புத்தகம் பேசுது  மாத இதழின் ஆசிரியர்

தமிழில் சிறுகதைஇ நாவல்இ மொழிபெயர்ப்பு அறிவியல் நூல்கள் என அனைத்து தளங்களிலும் இயங்கிவரும் முன்னணி எழுத்தாளர் என்றாலும் சிறுவர் இலக்கிய படைப்பாளியாகத் தீவிரமாக செயல்பட்டு வரும் இவருக்கு தமிழகத் தமிழாசிரியர் கழகம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.