15 மார்., 2015

"தாய்மொழி வழியாக எண்களை உச்சரிக்க மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்ட வேண்டும்"

மார்ச் 13,2015,11:05 IST


புதுடில்லி: தமி்ழ், இந்தி, தெலுங்கு, வங்கம் உட்பட அவரவர் தாய் மொழி வழியாக எண்களை உச்சரிக்க மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்ட வேண்டும் என உத்தரகண்ட் மாநில பா.ஜ., எம்.பி., தருண் விஜய்
கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் பேசிய அவர் அவரவர் தாய்மொழி வாயிலாக எண்களை உச்சரிக்க தவறி வருகிறோம். நம் கண் முன்னே பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்திய மொழி எண்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையை மாற்றும் வகையில் பள்ளிகளில் தாய்மொழியில் எண்களை உச்சரிப்பதற்கு கற்று தரும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய நிலையில் மொழி வாயிலாக எண்களை உச்சரிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. இதே நிலைநீடித்தால் வரும் காலத்தில் மொழிகள் அழிந்து போகும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.