30 டிச., 2014

அமைதிக்கான நோபல் பரிசு

கைலாஷ் சத்யார்த்தி, மலாலா
அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த
 கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான்
 பெண் மலாலாவுக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி. பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலாவுக்கு 2014-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு .............

இலக்கியத்துக்கான நோபல் பரிசு - 2014

பாட்ரிக் மோதியானோ
இலக்கியத்துக்கான நோபல் பரிசை பிரெஞ்சு எழுத்தாளர் பாட்ரிக் மோதியானோ வென்றுள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை பிரெஞ்சு எழுத்தாளர் பாட்ரிக் மோதியானோ வென்றுள்ளார். "நினைவின் கலையைக் கொண்டு .........

சாகித்ய அகாடமி விருது - 2014

தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவரான பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற புதினத்துக்கு, சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய உலகில் மிக உயரிய விருதான சாகித்ய அகாதமி, ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசையும் பாராட்டுப் பத்திரத்தையும் கொண்டதாகும். இந்த ஆண்டு 20 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாதமி விருது குறித்த அறிவிப்பு டெல்லியில் 19.12.2014 ..............

‘பால சாகித்ய புரஸ்கர் விருது’ - 2014

”ஆயிஷா”நடாராஜன்

ஆயிஷா”  நுாலின் ஆசிரியர்  திரு. இரா.நடாராஜன் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டுகான ‘பால சாகித்ய புரஸ்கர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. பால சாகித்ய புரஸ்கர் விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருது. இவருக்கு  ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
இவர் சிறுவர் இலக்கியங்கள், கல்வி குறித்து நிறைய நுால்கள் எழுதியுள்ளார்.

பிறப்பு 1964

இவரது ஆயிஷா.................

தமிழாசிரியர் முழக்கம்


காஞ்சிபுரம் செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் நமது கழகத்தின் போர்க்குரல் “தமிழாசிரியர் முழக்கம்” மாநிலப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளையும் மாவட்டக் கழகச் செய்திகளையும் புதிய புதிய கருத்துப் பேழைகளையும் தமிழாசிரியர்களின் படைப்புகளையும் தமிழகத் தமிழாசிரியர்கள்  அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தூதுவனாக விரைவில் உங்கள் கையில்…
 உங்களின் சிறந்த படைப்புகள், போட்டித் தேர்வுகளுக்கான வினா விடைத் தொகுப்புகள், கலைச்சொல்லாக்கங்கள் இவற்றை அனுப்பி இதழுக்கு உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள். “தமிழாசிரியர் முழக்கம்” சங்க இதழாக மட்டும் இல்லாமல் படைப்பிலக்கிய இதழாக, உலகத் தமிழர்களின் அடையாள ஆவணமாக, போட்டித் தேர்வாளர்களின் கலைக்களஞ்சியமாக மாற உங்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.