மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக் கழகத்தில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு வருகிற 29.01.2015 முதல், பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் நம்முடைய சிறப்புத் தலைவர் அய்யா ஆறுமுகம், பொருளாளர் கோவிந்தன், தலைமை நிலையச் செயலர் மதியழகன், சென்னை மாவட்டத் தலைவர் தாயுமானவன், திருச்சி மாவட்டச் செயலர் ரபேல், சிவகங்கை மாவட்ட மதிப்பியல் தலைவர் பேராசிரியர் கருப்பத்தேவன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுரை படிக்க உள்ளனர்.
” குறுந்தொகையில் புறச்செய்திகள்” - சிறப்புத் தலைவர் அய்யா ஆறுமுகம்
” இளங்கோவடிகளின் காலம்” - பொருளாளர் கோவிந்தன்
”குறுந்தொகையில் மனிதநேயச் சிந்தனைகள்” - சென்னை மாவட்டத் தலைவர் தாயுமானவர்