8 ஜன., 2015

மாடல்ல மற்றை யவை.. - நுால் அறிமுகம்

மாடல்ல மற்றை யவை..
- நுால் அறிமுகம்
சிவகங்கை மாவட்ட இணைச் செயலர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு நுால் வெளியீட்டு விழா 05.01.2014 அன்று காரைக்குடியில் இனிதே நடைபெற்றது. பேராசிரியர். முனைவர். அய்க்கண் தலைமை தாங்கி விழாப்பேருரை ஆற்றினார். இந்நுாலுக்குத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலச் செயலர் நீ.இளங்கோ அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார். சுழல் என்னும் சிற்றிதழின் ஆசிரியராகவும் உள்ள இந்நுாலின் ஆசிரியர் தேவகோட்டை தே பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நுாலினைச் சேலம், வாசகன் பதிப்பகமும் காரைக்குடி, வள்ளுவர் பேரவையும் இணைந்து வெளியிட்டுள்ளன.
நுாலின் பெயர் -  மாடல்ல மற்றை யவை..
நுால் பிரிவு    –  சிறுகதைத் தொகுப்பு
பதிப்பு         –  முதல் பதிப்பு 2014
விலை        –  ரூ.55
ISBN           -   978-93-83188-20-8
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBScc-oWMHANfvQnM69XmlVlOKZ97inwMJmn3Xz57Ivs9iDt5IECn4LWtwd4YYMjn0O0ZR185TQ9q86Od3zSs-m2dbJmAEDcKhB0phyphenhyphenAwtAhiFT9qLw3B19JG4Ye3TDywf5qgg0RPcRqFH/s1600/stephen+nool+veliyeedu.jpg


கருத்துகள் இல்லை: